விடத்தல் தீவில் 4 பெண் விடுதலைப் புலி உறுப்பினர்களின் சடலங்கள் மீட்பு

மன்னார் முன்னரங்கப் பகுதியில் மீட்கப்பட்ட நான்கு பெண் விடுதலைப் புலி உறுப்பினர்களின் சடலங்கள் மன்னார் பொலிஸாரால் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 
 
மன்னார் விடத்தல் தீவு பகுதியில் இராணுவத்தினரால் மீட்கப்பட்ட இந்த நான்கு சடலங்களும் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டு, பொலிஸார் ஊடாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சடலங்களை வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்ட மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன், விடுதலைப் புலிகள் உரிமை கோரும் பட்சத்தில் நான்கு சடலங்களையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply