நிலையான சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : கத்தோலிக்க ஆயர்கள்
நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டு மென கத்தோலிக்க ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர். நத்தார் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமாதானத்திற்கான தடைகளை அடையாளம் காண்பது மட்டுமன்றி, சமாதானத்தை நிலைநாட்டாவிட்டால் ஏற்படக் கூடிய அபாயங்களையும் கவனிக்க வேண்டுமென ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யேசு கிறிஸ்து நாதரின் சமாதானத்தை சகல சகோதர சகோதரிகளுடனும் பகிர்ந்து கொள்வோம் என கோரியுள்ளனர். நிலையான சமாதானத்தை நடைமுறைச் சாத்தியமுடைய ஓன்றாக மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளனர்.
வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இயன்றளவு உதவிகளை வழங்குவதே நத்தார் பண்டிகையின் முக்கிய செய்தியாகும் என குறிப்பிட்டுள்ளனர். ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துச் செல்வதாகவும், இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply