முன்னாள் புலிசந்தேக நபர்கள் 98 பேர் இன்று பெற்றோரிடம் ஒப்படைப்பு
நத்தார் தினத்தை முன்னிட்டு புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியிருந்த முன்னாள் புலிசந்தேக நபர்கள் 98 பேர் இன்று காலை சனிக்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளனரென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். நேற்று கிளிநொச்சியில் 1983ம் ஆண்டு கால பகுதியின் பின்னர் வன்செயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடுகள் வழங்கும் வைபவத்தில் உரையாற்றியபோது மேற்கண்ட தகவலை அவர் வெளியிட்டார்.
இந்த வைபவத்தில் மனிதவள அபிவிருத்தி அமைச்சர் டியூ.குணசேகர மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர். 500 பேர் நட்டஈட்டுக்குரிய காசோலைகளை அமைச்சிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply