நத்தார் சமாதானத்தின் செய்தியை ஞாபகப்படுத்துகிறது :ரணில் விக்கிரமசிங்க

இயேசு அவதரித்த தினமான நத்தார், சமாதானத்தின் செய்தியை ஞாபகப்படுத்துகிறது. இதுவே, உலக மக்களின் பிரார்த்தனையாகும். பல்வேறு சிரமங்கள், பற்றாக்குறைகள் ஆகியவற்றுடன் வாழும் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச் செய்தியில் மேலும் அவர், ஒருவொருக்கொருவர் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டு பரஸ்பரம் உதவும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இயேசுவின் போதனையாகும்.

எதுவித வரப்பிரசாதங்களும், நிவாரணமும் அல்லது எதிர்பார்ப்பும் கரங்களை நீட்டி அவர்களை எதிர்பார்ப்புகள் நிறைந்த திருப்தியுடன் வாழவைப்பதே நத்தாரின் ஒரு முக்கிய செய்தியாகும். இதற்காகத் திரண்டெழுவோம் என இந்த நத்தார் தினத்தில் உறுதி பூணுவோம் என தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply