நத்தாரை கொண்டாடுவதன் மூலம் அமைதியும் கருணையும் ஏற்படுகிறது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் இந்த நத்தார் தினத்தில் இலங்கையருக்கும், உலகிலுள்ள சகலருக்கும் மகிழ்ச்சிகரமான நத்தாராகட்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.நத்தாரை கொண்டாடுவதன் மூலம் மனதில் அமைதியும் கருணையும் நிலை கொள்ளுகின்றது. விஷேடமாக ஏழைகளுக்கு உதவுவதும் அவர்களுக்கு அன்பு காட்டுவதும் எல்லா இனத்தவரோடும் சமாதானத்தைப் பகிர்ந்து கொள்வதும் நத்தார் பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.

கடந்த காலங்களில் இனங்களுக்கிடையே சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தவென நாம் பாரிய அர்ப்பணிப்புடன் செயற் பட்டோம். அயலானை நேசிப்பது என்ற இயேசு கிறிஸ்துவின் போதனை இதனூடாக அர்த்தம் பெறுகிறது. இலங்கை மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்காக நாம் முன்னெடுக்கின்ற முயற்சிகள் கிறிஸ்தவ மக்களினதும், ஏனைய மதத்தவர்களினதும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

“என்னுடைய நாமத்தினால் சிறு பிள்ளையொன்றை ஏற்றுக் கொள்பவன் என்னால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றான்” என்று இயேசு கிறிஸ்து நாதர் தனது போதனையில் தெரிவித்துள்ளார். இயேசு நாதர் இம் மண்ணில் அவதரித்த போது விண் மீன்கள் ஒளியூட்டின. அந்த விண்ணொளியின் திசையில் மூன்று ராஜாக்கள் இயேசுவை வணங்குவதற்கு வருகை தந்ததாக கிறிஸ்தவ வரலாறு கூறுகின்றது. அதேபோன்று இந்த நத்தார்

பண்டிகையிலும் சிறுவர்களை நாம் மகிழ்ச்சிப்படுத்துவது அவசியம். நத்தார் பண்டிகையைக் கொண் டாடும் நாம் அவ்வாறு செய்தால் இயேசு கிறிஸ்துவின் சமாதானத் தையும், கிருபையையும் நாம் அனைவரும் பெற்றுக் கொள்ள முடியும்.

உங்கள் அனைவருக்கும் அமைதியும், சமாதானமும் நிறைந்த மகிழ்ச்சிகரமான நத்தார் வாழ்த்து உரித்தாகட்டும் என்றும் நத்தார் செய்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply