பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசேட வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில்,
பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பாதுகாப்பைப் பலப்படுத்த விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வீதிச் சோதனைகளும் நடமாடும் கண்காணிப்புப் பிரிவும் ஏற்படுத்தப்படவுள்ளன. பண்டிகைக் காலங்களின்போது பிரதான நகரங்களில் அதிக சன நெரிசல் காணப்படுவதால் பயங்கரவாதிகள் நாசகார வேலைகளில் ஈடுபட முயற்சிப்பார்கள். எனவே மக்களின் விழிப்புடன் செயற்பட வேண்டும்.
சந்தேகத்துக்கிடமான நபர்கள், பொருட்கள் மற்றும் பொதிகள் தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினருக்கு பொதுமக்கள் உடனடியாக அறிவிக்க வேண்டும். அவ்வாறான இடங்களில் அதிகமாக நடமாடுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply