நத்தார் விழா அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் நடந்தது
அரச நத்தார் விழா நேற்று முன்தினமிரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி பேரருட்திரு மரியோ செனாரி ஆண்டகை, பேராயர் பேரருட்திரு ஒஸ்வோல்ட் கோமிஸ் ஆண்டகை, சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் வெளிநாட்டு ராஜதந்திரிகளும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
நத்தார் கரோல் கீதமிசைத்தல் மற்றும் கிறிஸ்து பிறப்பை நினைவுகூரும் கலாசார சமய நிகழ்ச்சிகள் பலவும் இவ்விழாவில் இடம்பெற்றதுடன் கரோல் கீதமிசைத்த பாடசாலை
மாணவர்களுக்கு ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ பரிசில்களை வழங்கி கெளரவித்தார்.
கொழும்பு பிசோப் கல்லூரி, மொரட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரி, மோதரை புனித அந்தோனியார் வித்தியாலயம், பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியர் மட மாணவிகள் ஆகியோரும் கரோல் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை வழங்கினர்.
இதேவேளை, சபாநாயகரின் வாசஸ்தலத்தில் வருடந்தோறும் இடம்பெறும் ‘தியவன்னா நத்தார் கீதம்’ நிகழ்ச்சி நேற்று மாலை பாராளுமன்ற வீதியிலுள்ள சபாநாயகரின் இல்லத்தில் இடம்பெற்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply