சுட்டுக்கொல்லப்பட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் உறவினருக்கு அமைச்சர் டக்ளஸ் ஆறுதல்
சுட்டுக்கொல்லப்பட்ட வலிகாமம் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேற்படி நபர் இனந்தெரியாதவர்களால் உரும்பிராயிலுள்ள அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே அமைச்சர் அங்கு சென்றார்.
சம்பவம் குறித்து உறவினர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் அங்கு விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.
இக்கொலை தொடர்பான விசார ணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளை இனங்காண்பதற்கு உடனடி நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காத விதத்தில் பொலிஸார் மேற் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக் கைகள் குறித்தும் ஆராய்ந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply