கெமரா ஊடாக கொழும்பு நகரை கண்காணிக்கும் பணி இன்று முதல் ஆரம்பம்
பாதுகாப்பு கெமராக்களினூடாக கொழும்பு நகரை கண்காணிக்கும் பணிகள் இன்று 29ம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தலைமையில் புறக்கோட்டையிலுள்ள பொலிஸ் நலன்புரி கட்டடத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இன்று பிற்பகல் 4.00 மணிக்கு விஜயம் செய்யும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சி.சி.ரி.வி. செயற்பாடுகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
முதற்கட்டமாக கொழும்பு நகரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வுள்ளது. பின்பு படிப்படியாக ஏனைய பிரதான நகரங்களில் கெமராக்கள் பொருத்தப்படவு ள்ளன.
குற்றச்செயல்கள் மற்றும் விபத் துக்கள் போன்றவற்றை உரிய முறையில் கண்காணித்து உடனுக்குடன் தடுத்து நிறுத்தும் வகையிலேயே இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply