வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுமாம்

வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும்.  போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்ட பின்னர் கூட்டமைப்பின் செயற்குழு கூடி முடிவு செய்யும் என தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சித் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் ஜனவரி 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இதற்கிடையில் எதிர்வரும் 3ஆம் திகதி உத்தேச உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலத்தில் கொண்டு வரப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பான தகவல்களை அரசு கூட்டமைப்பினருக்கு வழங்க உள்ளது.

 
அதனையடுத்து எதிர்வரும் 10ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் என அரச வட்டாரங்கள்தெரி விக்கின்றன.இந்தநிலையில், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போட்டியிடும். இதேவேளை, தமிழ் மக்களின் பிரச்சினை, வடக்கு, கிழக்கிலுள்ள மீள்குடியேற்றப்பட்டவர்களின் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தத் தயார் என்று பல தடவைகள் கோரியுள்ளோம்.ஆனால், அரசிடமிருந்து எவ்வித பதிலும் இதுவரை வரவில்லை. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டால், பேச்சு நடத்தத் தயார் எனவும் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply