தாய்நாட்டின் கெளரவத்தை பாதுகாக்க திடசங்கற்பம் கொள்வோம்
அபிவிருத்தி இலக்கினை அடைந்துகொள்வதற்குத் தேவையான சக்தியை வழங்கவும் ஒற்றுமையை நிலைநாட்டவும் தாய் நாட்டின் கெளரவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் இத்தருணத்தில் திட சங்கற்பம் கொள்ளல் வேண்டுமென பிரதமர் தி. மு. ஜயரட்ன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரி வித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-ஆண்டொன்று கழிந்து புதிய ஆண்டொன்றின் உதயம் என்பது வாழ்க்கையைப் பற்றிப் புதிதாகச் சிந்திக்கவும் எமது சிந்தனைகளை புதிய இலக்கினை நோக்கி நகர்த் தவும் இயற்கையானது மனிதர்களுக்கு அளித்துள்ள பெறுமதிமிக்க பரிசொன்றாகும்.
அந்தப் பொருளில் நோக்கி னால், உதயமாகும் 2011 புது வருடத்தில் இலங்கை வாழ் சகல மக்களும் பொதுவாக அடைந்து கொள்ளக்கூடிய இலட்சியங்களும், தனித்தனி நபர்களாக அடைந்து கொள் ளக்கூடிய இலட்சியங்களும் ஏராளம் உண்டு என நான் கருது கின்றேன். தனி நபராக தனது முன்னேற்றத்திற்குத் தேவையான பின்னணியை ஏற்படுத்திக் கொள்வதுடன் ஒரே நாடு.
ஒரே இனம் என்ற நோக்கில் குறித்த அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்வதற்குத் தேவையான சக்தியை வழங்கவும் ஒற்றுமையை நிலைநாட்டவும், தாய் நாட்டின் கெளரவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் இத்தருணத்தில் நாம் திடசங்கற்பம் கொள்ளல் வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மஹிந்த சிந்தனை தொலைநோக்கின் பிரகாரம் செழிப்பினை நோக்கிச் செல்லும் பாதையில் விளைச்சலை அறுவடை செய்யும் ஆண்டாகவும் 2011 ஆம் ஆண்டை குறிப்பிட விரும்புகின்றேன். ஒரு புறம் நாட்டினுள் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதுடன் மறுபுறம் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களின் பயன்கள் மக்களைச் சென்றடைவதும் இந்தப் புத்தாண்டில் இடம்பெறும் என்பது எனது பூரண நம்பிக்கையாகும். சமூக மற்றும் பொருளாதார ரீதியாக இந்தச் சகல வெற்றிகளையும் அடைந்துகொள்ள வேண்டுமாயின் பிரிவினை அற்ற தேசத்தினுள் உன்னத இலங்கையர் என்ற ஒரே இனமாக நாம் கைகோர்த்துக் கொள்ள வேண்டும்.
2600 வது சம்புத்த ஜயந்தியைக் கொண்டாடும் 2011 ஆம் ஆண்டு இலங்கை மக்களுக்கும் அதேபோல் உலகில் வாழும் பெளத்தர்களுக்கும் மிக விஷேடமான ஒன்றாக அமைவதுடன், அதனைப் பின்பற்றி உண்மையான பெளத்தர்களாக அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் மனதில் உறுதி கொள்ள வேண்டும். சகல மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வின் மூலம் இன, மத, குல, உயர்ந்தேன், தாழ்ந்தோர் போன்ற பேதங்களை விட்டொழித்து சகலரும் சம உரிமை கொண்ட இலங்கையர் என்ற ஒரே இனமாகச் செயற்பட வேண்டியதுடன் அதற்கான ஆன்மிகப் பண்புகளைத் தமது பக்தர்களிடம் பரப்பும் பொறுப்பினை சர்வமத போதகர்களும் ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply