இலங்கைத் தமிழர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தக்கூடாது
அவுஸ்திரேலியாவுக்கு சென்று அகதி அந்தஸ்து கோரியுள்ள இலங்கைத் தமிழர்களை அந்நாட்டு அரசாங்கம் நாடு கடத்தக்கூடாது என சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஓசியானிக் வைக்கிங் கப்பலின் மூலம் காப்பாற்றப்பட்ட தமிழர்கள் மீள்குடியேற்றத்துக்காக இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை ஏற்றுக்கொள்ள கனடாவும், அமெரிக்காவும் மறுத்ததையடுத்து, அவர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்த முயற்சிப்பதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.
அவர்கள் நாடு கடத்தப்பட்டால் இலங்கையில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பிரகடனப்படி, அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களை அவர்களின் நாட்டுக்கு திருப்பி அனுப்புவது ஏற்றுக்கொள்ள முடியாததது என்றும் சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply