உள்ளூராட்சி சபை தேர்தல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று இறுதித் தீர்மானம்
உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான இறுதித் தீர்மானங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று மேற்கொள்ளும் என கட்சியின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் நேற்று தெரிவித்தார். கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இன்று கூடவுள்ளதாகத் தெரிவித்த அவர், இதன் போதே எதிர்வரும் உள்ளூராட்சிச் சபை தேர்தல் குறித்த முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட வுள்ளதாகவும் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை அம்பாறை உள்ளிட்ட சகல மாவட்டங்களின் கீழுள்ள உள்ளூராட்சிச் சபைகளிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை போட்டி யிடவுள்ளது.
வேட்பாளர் தெரிவு மற்றும் இதர விடயங்கள் குறித்து இன்று தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுமென தெரிவித்த அவர், தனித்துப் போட்டியிடுவதா அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா என்ற விடயம் குறித்தும் இன்று கலந்துரையாடப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேயர், தவிசாளர், வேட்பாளர்கள் நியமனங்கள் தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply