வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்துவதை தடுக்க நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பு இருப்பது அவசியம்

சட்டவிரோதமான  முறையில் வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்துவதைத் தடுப்பதற்கு  நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பு இருப் பது அவசியமானது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். ஆட்கடத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் இலங்கைத் தூதுவர்களை நேற்று முன்தினம் வெளிவிவகார அமைச்சில் சந்தித்தபோதே அமைச்சர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஆட்கடத்தலானது நாடுகளுக்கிடை யிலான பாதுகாப்பைப் பலவீனப்படுத்து வதுடன் தொடர்புடையது. பயங்கரவாதத்துக்கு நிதியுதவியளித்தல், சட்டவிரோதமான பணப் பரி மாற்றம், ஆயுதக்கடத்தல் போன்ற வற்றுக்கு ஆட்கடத்தல்களே வழி வகுக்கின்றன.

இலங்கை பயங்கர வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த கால ப்பகுதியில் ஆட்கடத்தல்கள் பயங்க ரவாதத்தை மேலும் வளர்ப்பதற்கு உதவியாகவிருந்தன. நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஸ்திரத் தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ள போதும் சட்டவிரோத ஆட்கடத்தல்கள் இலங்கை தொடர்பாக சர்வதேச ரீதியில் எதிர்மறையான நிலைப்பாட்டையே காண்பிக்கின்றன.

ஆட்கடத்தல்காரர்கள் சட்ட விரோதமாகக் புகலிடம் கோருபவர்களையும், அவர்களின் குடும்பங்களையும் ஆபத்தான நிலைக்கே தள்ளுகின்றனர். இது பல உயிர்களை இழக்கும் நிலைமையையே ஏற்படுத்துகிறது. எனவே இப்பிரச்சி னையைத் தீர்ப்பதற்கு அனைத்து நாடுகளும், குறிப்பாக இடைத் தங்கல் நாடுகளாகப் பயன்படுத்தப் படும் நாடுகள் முன்வரவேணடு்ம்.

கடத்தப்படும் அப்பாவி மக்களுக்கு எதிராக அல்லாமல் கடத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அனை த்து நாடுகளும் நடவடிக்கை எடு க்கவேண்டும். இலங்கையிலிருந்து சட்டவிரோத ஆட்கடத்தல்கள் நடத்தப்படுவைத் தடுப்பதற்கு எமது நாடு பிராந்திய நாடுகளுடன் இணை ந்து செயற்படுகிறது. சட்டவிரோத ஆட்கடத்தலானது நாட்டின் குடிவரவு, குடியகல்வுத் திட்டத்துக்கும் எதிராக அமைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறினார்.

சட்டவிரோத ஆட்கடத்தல்களைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கை கள் தொடர்பாக விளக்கமளித்த மைக்கு, வெளிநாட்டுத் தூதுவர்கள் வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். இந்தச் சந்திப்பில் உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் ஆட்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாக இச்சந்திப்பில் கலந்து கொண்ட நீதி அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்தார்.

சட்டவிரோதமான கட்டமைப்புக்களை நீக்குதல், தேசிய மட்டத்திலான செயலணி களை உருவாக்குதல், இலங்கை அரசாங்கத்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதியமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply