தேர்தலில் தனியாகக் களமிறங்குகிறது ஜேவிபி
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், தாம் தனித்துப் போட்டியிட்டாலும் தமது கூட்டணியில் உடைவு எதுவும் கிடையாது எனவும், சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய தொடர்ந்தும் போராடுவோம் எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply