முழுமையான விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு : ஊடகத்துறை அமைச்சர்

யாழ். குடாவில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல்கள், கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அது தொடர்பிலான உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தில் சம்பவங்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது இந்த விடயத்தை அரசாங்கமே முதன் முதலில் வெளிப்படுத்தியது.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளது. அரசாங்கம் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி விசாரணைகளை முன்னெடுக்கும். இது தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கியு ள்ளார்.

சர்வதேச மட்டத்தில் இலங்கை தொடர்பில் தவறான அபிப்பிராயங்களைப் பரப்புவதற்கு சில தரப்பினர் முயல்கின்றனர். அதற்காக யாழ். விவகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக நாம் எமது பொறுப்பிலிருந்து விலக மாட்டோம்.

இன்னும், 1ண மாதங்களில் ஜெனீவாவில் மனித உரிமை மாநாடு நடைபெற உள்ளது. அதனை இலக்கு வைத்தே இவ்வாறான செய்திகள் வெளியிடப்படுகின்றன. இலங்கையை மிலேச்சத்தனமான நாடாக சர்வதேச மட்டத்தில் காண்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதனை விட பாரிய சவால்களை கடந்த காலங்களில் நாம் வெற்றிகரமாக முகம்கொடுத்தோம். இன்றுள்ள சவால்க ளையும் அதுபோன்றே வெற்றிகொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

உலக ஊடக சுதந்திர தினத்தின் போது ஊடகவியலாளர் தொடர்பான பிரச்சினைகள் பெரிதுபடுத்தப்படும். மனித உரிமை தினங்களின் போது மனித உரிமை மீறல் தொடர்பில் குற்றச்சாட்டுகள் வைக்கப்படும். இவை திட்டமிட்டே முன்வைக்கப்படுகின்றன.

யாழ். குடா விடயத்தை ஓரங்கட்டாது அது தொடர்பான பொறுப்பை ஏற்று அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றஞ் சாட்டப்படுவதாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் அந்தக் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்தார். யாழ். குடாவில் இடம்பெறும் குற்றச் செயல்கள் குறித்து அமைச்சர் டக்ளஸே முதலில் சபையில் கேள்வி எழுப்பியதாகக் கூறிய அமைச்சர் அவர் மீது குற்றஞ் சுமத்த முடியாது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply