கே.பியை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் ரணில்

கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை உடனடடியாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என எதர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு, சீதுவையில் நேற்று இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், சரத் பொன்சேகா தன்னுடைய மருமகனுடன் கம்பனி ஒப்பந்தம் செய்து கொண்டார் என்பதற்காக சிறைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் என்ன லாபம் கிடைத்தது என ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, ஜயலத் ஜயவர்த்தனவை அச்சுறுத்துவதை விட்டுவிட்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளியான குமரன் பத்மநாதனை உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அரசினை வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், நீர்கொழும்பு மக்களை இதனை வழுயுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply