உள்ளூராட்சி தேர்தலுக்காக இம்மாதம் 20முதல் 27 வரை வேட்புமனு தாக்கல்
கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்யமுடியும் என தேர்தல்கள் திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.வியாழக்கிழமை நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தத்தமது மாவட்ட செயலகங்களில் 27 ஆம்திகதி நண்பகலுக்கு முன்னர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருப்பதுடன் சுயேச்சைக்குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருக்கவும் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
200 பிரதேச சபைகள், 39 நகர சபைகளின் ஆட்சிக் காலம் வியாழன் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply