கொழும்பு-தூத்துக்குடி: தலைமன்னார்-இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரம் மூன்று சேவைகள்

இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையில் பயணிகள் கடல் போக்குவரத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று பிற்பகல் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் அலரிமாளிகையில் கைச்சாத்திடப்பட்ட இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில், இந் தியா சார்பில் உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, இலங்கை சார்பில் துறைமுகங்கள், பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் சுஜாதா குரேயும் கைச்சாத்திட்டனர்.

இதன்படி கொழும்பு- தூத்துக்குடி, தலைமன்னார்- இராமேஸ்வரம் இடையில் பயணிகள் கப்பல் போக்கு வரத்து சேவை ஆரம்பிக்கப்படவிருக் கின்றது. என்றாலும், கொழும்புக்கும், தூத்துக்குடிக்குமிடையில் முதலில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்குக்குமிடையில் கடந்த வருடம் (2010) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பயனாகவே இருநாடுகளுக்குமிடையில் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக் கப்படவிருக்கின்றது.

புலிப் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையில் யாத்திரிகர்கள், வியாபாரிகள், உல்லாசப் பயணிகள் மற்றும் கல்வி நடவடிக் கைகளுக்கான போக்குவரத்து என்பன நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான நிலையில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக் கப்படுகின்றது.

இலங்கை சுற்றுலா அதிகார சபையின் அறிக்கைப்படி, 2010ம் ஆண்டின் நவம்பர் மாதம் முடிவுறும் தருவாயில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 129 பேர் (111, 129) இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது மாதாந்தம் 10 ஆயிரம் பேர் இங்கு வருகை தந்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றது.

இரு நாடுகளுக்குமிடையிலான பாரம் பரிய தொடர்பாடலின் அடிப்படையில் கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையிலும், தலை மன்னாருக்கும், இராமேஸ்வரத்திற் கிடையிலும் 1982ம் ஆண்டு வரையும் கப்பல் சேவை இடம்பெற்றது. என்றாலும் பயங்கரவாத செயற்பாடுகள் ஆரம்பமான தைத் தொடர்ந்து இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.

இருப்பினும் தற்போது ஆரம்பிக்கப்பட விருக்கும் கொழும்பு, தூத்துக்குடிக்கிடை யிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று தடவைகள் நடாத்தப்படவிருக்கின்றன. இச்சேவையில் ஒரு தடவைக்கு ஐநூறு (500) பயணிகளுக்கு வசதி செய்து கொடுக்கப்படும். அத்தோடு ஒரு பயணி நூறு (100) கிலோ கிறாம் பொருட்களை எடுத்து செல்லுவதற்கும் இவ்வுடன்படிக்கையின் கீழ் வசதியளிக்கப்பட்டுள்ளது.

இப்புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில் பிரதியமைச்சர் ரோகித அபேகுணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply