‘மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைச் சிதைக்க சர்வதேசம் பகீரதபிரயத்தனம்’
தம்மீது மக்கள் வைத் துள்ள நம்பிக்கையை சிதைப்பதற்கு சர்வதேசம் பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டை அபிவி ருத்தியில் கட்டியெ ழுப்பும் நடவடிக்கைகளை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் தம்மை ஓர் ஏகாதிபத்தியவாதியாக வெளிநாடுகளுக்குக் காட்ட விளைகின்றனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்களுக்கு அர்ப்பணிப்புள்ள சேவைகளை வழங்கியமைக்காக 17 பிரதேச செயலகங்கள் மற்றும் மூன்று மாவட்டச் செயலகங்களுக்கு சர்வதேச தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது. சம்பந் தப்பட்ட பிரதேச மாவட்டச் செயலாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற் றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். சிரேஷ்ட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கை யில் :-
தற்போது நாட்டில் பலமுள்ள அரசாங்கம் உள்ளது. தேர்தலில் எனக்கெதிராக வாக்களித்தவர்களும் எமது செயற்பாடுகளைக் களைந்து எம்முடன் இணைந்து செயற்படுகின்றனர். என் மீது முழுமையான நம்பிக்கையை வைத்துள்ளனர்.
இந்த நம்பிக்கையை சீர்குலைப்பதற்கு சர்வதேச சமூகம் பகீரத பிரயத்தனம் செய்கிறது. விக்கிலீக்ஸ் போன்றவற்றினை உபயோகப்படுத்தி இச்சதி முயற்சிகள் நடைபெறுகின்றன. இதற்குச் சில சக்திகள் துணை போகின்றன.
நாம் நாட்டின் பொருளாதாரத்தைச் சிறந்த முறையில் கட்டியெழுப்பி வருகிறோம். ஜீ. எஸ். பி. வரிச் சலுகை கிடைக்காவிட்டாலும் ஆடைத் தொழில் துறை பெரும் வருமானம் ஈட்டி வருகிறது. மேலும் தொழிற்சாலைகள் தேவைப்படு கின்றன.
ஜீ. எஸ். பி. சலுகைக்கு எதிராக செயற்படுபவர்கள் நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் மக்களின் முன்னேற்றத்தின் மீதும் சம்மட்டியால் அறைகிறார்கள் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply