உண்மையை மறைப்பதில் எவ்வித பயனும் இல்லை.ஆணைக்குழு முன் மன்னார் ஆயர் சாட்சியம்

கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு நேற்று 8ஆம் திகதி மன்னாரில் சாட்சியங்களைப்பதிவு செய்து கொண்டுள்ளதோடு இன்று மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் தனது சாட்சியங்களை பதிவு செய்து கொள்ளவுள்ளது. மன்னார் அரசச்செயலகக் கெட்டிடத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. இதன் போது மன்னார் ஆயர் அதிவணக்கத்திற்குறிய இராயப்பு யோசேப்பு ஆண்டகை முதலில் சாட்சியங்களை வழங்கினார்.

இதன் போது மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை மற்றும் முன்னால் குரு முதல்வர் அருட்தந்தை சேவியர் குருஸ் ஆகியோர் இணைந்து முதலில் சாட்சியமளித்தனர். இதன் போது மன்னார் ஆயர் சாட்சியமளிக்கையில் தெரிவித்ததாவது,

முதலில் உண்மை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என மன்னாரில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளித்த மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யேசேப்பு ஆண்டகை தெரிவித்தார். இவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,

இந்த நாட்டின் தமிழ் மக்கள் பட்ட துன்பங்கள் அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மனிதாவிமான நடவடிக்கைகளுக்கு எதிராக செய்யப்பட்ட காரியங்கள் ஆகியவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சிறப்பாக மக்கள் காணாமல் போன விடயம், சட்டத்திற்கு மாறாக மக்கள் கொல்லப்பட்ட விடயங்கள் ,சட்டத்திற்கு முன்னாள் மக்கள் குற்றவாழிகள் என அறியப்பட்டவர்கள்,வேறு விதமாக பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட விடயங்கள், தமிழ் மக்களை கொண்டு போய் சித்திர வதை செய்தவை,மக்கள் வாழும் இடங்களில் குண்டுகள் வீசப்பட்டமை, கட்டிடங்கள், மருத்துவமனை போன்றவற்றை அழித்தொழித்த உண்மைகளை அவர்கள் கொண்டு சொல்ல வேண்டும்.என மன்னார் ஆயர் ஆணைக்குழுவிற்கு தெரிவித்தார்.

உண்மைகளை மறைப்பதினால் எவ்விதமான பயனும் இல்லை. உண்மைகளை எடுத்து அவை மக்கள் முன்னால் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட் வேண்டும் என தெரிவித்தார்.யார் இதை செய்தார்கள் என்ற உண்மை வெளிப்படத்தப்படும் போதே மக்கள் மத்தியில் உண்மையான ஒப்புரவு ஏற்படுவதோடு சமரசம் செய்ய முடியும் என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து காணமல் போன, கடத்தப்பட்டவர்களின் உறவினர்களும் சாட்சியமளித்தனர்.இதே வேளை மீள்குடியேற்றம் செய்யப்படாத கிராமங்களைச்சேர்ந்த மக்களும் சாட்சியமளித்தனர். மேற்படி ஆணைக்குழுவில் சாட்வியமளிக்க சந்தர்ப்பம் கிடைக்காதவர்களின் கடிதங்கள் பொற்றுக்கொள்ளப்பட்டதோடு அவை பரிசீலினை செய்யப்பட்ட பின்னர் விசாரணைகளுக்காக அழைக்கப்படுவார்கள் என ஆணைக்குழு மக்களுக்கு தெரிவித்தது.மதியம் 2 மணியளவில் அமர்வுகள் நிறைவு பெற்றது.இதன் போது மன்னார்,நாணாட்டான்,முசலி ஆகிய பிரதேசச்செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்த பல நூற்றுக்கணக்காண மக்கள் வருகைதந்தனர்.

இதனைத்தொடர்ந்து மாந்தை மேற்கு பிரதேசச்செயலாளர் பிரிவிற்கான ஆணைக்குழுவின் சாட்சியப்பதிவு மாலை 3 மணியளவில் மாந்தை மேற்கு உதவி அரச அதிபர் பணிமனையில் இடம் பெற்றது.இதன் போது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட போதும் குறிப்பிட்ட சிலருக்கே சாட்சியம் அழிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இன்று காலை 9.30 மணிமுதல் 12.30 மணிவரை மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இடம்பெறவுள்ளமை குறிப்படத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply