சுவிஸ் மத்திய பொலிஸார் நடவடிக்கை சுவிஸ் புலிகளின் முக்கியஸ்தர்கள் கைது!
சுவிற்சர்லாந்து நாட்டில் செயற்பட்டுவந்த புலிகளின் முக்கியஸ்தர்கள் சுவிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவிற்சர்லாந்து நாட்டின் சட்டமா அதிபரின் உத்தரவுக்கமைய Basel City, Bern, Fribourg, Geneva, Graubünden, Lucerne, Solothurn, St Gallen, Vaud and Zurich. போன்ற 10க்கு மேற்பட்ட மாநிலங்களில் 23 இடங்களில் இத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயங்கரவாத இயக்கம் ஒன்றின் உறுப்புரிமையை கொண்டிருந்தமை, அவ்வியக்கத்திற்கான ஆயுதங்களை கொள்வனவு செய்தமை, பலாத்காரமாக பணம் சேகரித்தமை, சுவிஸில் வாழ்ந்துவரும் தமிழ்மக்களை அச்சுறுத்தியமை போன்ற பல காரணங்கள் இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் என சுவிஸ் நாட்டின் தேசிய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இவர்கள் சுவிஸில் வாழ்ந்துவரும் இலங்கை மக்களிடம் சேகரித்த பணத்தினை கொண்டு பயங்கரவாத இயக்கம் ஒன்றிற்கு ஆயுதங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், சுவிற்சர்லாந்து நாட்டில் சேகரிக்கப்பட்ட பணம் மூன்றாம் நாடு ஒன்றின் ஊடாக சட்டத்திற்கு புறம்பாக சுவிற்சர்லாந்துக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், சிறிதளவு பணம் வங்கிமூலம் மாற்றப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் போலியான சம்பள கொடுப்பனவுவ் சான்றிதழ்களை தயாரித்து மக்களுக்கு வழங்கி அச்சான்றிதழ்களின் உதவியுடன் வங்கி கடன்களை பெற்றுக்கொண்டு, அப்பணத்தினையும் மக்களிடம் இருந்து அபகரித்து கொண்டுள்ளார்கள் என்ற குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள புலிகளின் முக்கியஸ்தர்களில் குலம், மாம்பழம், அல்பிரட், அப்துல்லா உட்பட 8பேர் வரை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் விசாரணைகளின் பின்னர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply