முன்னாள் தலைவர்கள் புலிகளுக்கு ஆயதம் வழங்கினர் : மகிந்த ராஜபக்ஷ

நாட்டில் இருந்த முன்னாள் தலைவர்கள் விடுதலைப்புலிகளுக்கு வழங்கிய, ஆயுதங்கள் மூலம் இலங்கை படையினர் சுடப்பட்டு இறந்ததையும், அங்கவீனர்களாக மாறிய யுகத்தை சிலர் மறந்து போயுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பெலவத்தை டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள அங்கவீனமான படையினரின் உற்பத்திகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை 10 ஆம் திகதி திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
 
1980 ஆம் ஆண்டு முதலாவது படைச்சிப்பாய் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் முதல் இன்று வரை பெரும் எண்ணிக்கையிலான படையினர் கொல்லப்பட்டு விட்டனர். பெரும் எண்ணிக்கையான படையினர் அங்கவீனர்களாக மாறியுள்ளனர். 1983 ஆம் ஆண்டு வடமராட்சி போரை முடிவுக்கு கொண்டு வர இடமளித்திருந்தால்,  பெரும் எண்ணிக்கையில் படையினர் கொல்லப்பட்டதையும், அங்கவீனமடைந்ததையும் தடுத்திருக்கலாம். நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது.
 
நாட்டில் ஆட்சி செய்த சில தலைவர்கள்  பயங்கரவாதத்தை ஒழிக்க உதவிகள் கிடைத்த போது, அதற்கு எதிராக படையினர் ஊடாகவே ஆயுதங்களை புலிகளுக்கு வழங்கினர். அந்த ஆயுதங்களை புலிகள் படையினரை சுட்டுக்கொல்லவும், அவர்களை அங்கவீனப்படுத்தவும் பயன்படுத்திக் கொண்டனர்.
 
நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னரும், பயங்கரவாத்தை ஒழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட பயணத்தை தடுத்து நிறுத்த சர்வதேச சக்திகள் மாத்திரமல்ல சில உள்நாட்டுஅ சக்திகளும் முயற்சித்தன.
 
எது எப்படியிருந்த போதிலும் நாம் ஆட்சிக்கு வந்து, மக்களின் உதவியுடன், முப்படைகளின் பலத்தின் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கையை ஆரம்பித்தோம். இதன் போது பாரிய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது. எந்த சக்திகள் வந்தாலும் நாட்டின் பௌத்த தேரர்களும், மக்களும் எம்முடன் இருப்பார்கள் என்பதை அந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் அறிந்துக்கொண்டோம்.
 
காட்டி கொடுப்புகளை மேற்கொண்டு, இலங்கையை சர்வதேசத்திற்கு மத்தியில் அசௌகரியத்திற்கு உள்ளாக்குவத்றகாக மாத்திரமல்ல வேறு குறுகிய நோக்கங்களை நிறைவேற்றி கொள்ள முயற்கசிக்கும் டொலர்களுக்கு அடிபணிந்த சிலர் தனியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தனர். அவற்றை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
 
சிலர் கொல்லப்பட்ட மற்றும் அங்கவீனமடைந்த படையினரின் விபரங்களை திரட்டுவதில்லை. வேறு வேறு தகவல்களை திரட்டி அவற்றை பட்டியலிட்டு, விசாரணை நடத்துமாறு சர்வதேசத்திற்கு அனுப்புகின்றனர். யாருக்கு எதிராக இந்த விசாரணைகளை நடத்துகின்றனர். நாம் மானிதாபிமான நடவடிக்கைஇயே மேற்கொண்டோம். அது பயங்கரவாத்திற்கு எதிரான போராட்டம்.
 
படையினர் இந்த நாட்டுக்காகவும் இனத்திற்காகவும் நாட்டை அழித்த பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்ட செயற்பாடுகளை மறந்து விட முடியாது. சிலர் எம்மை சர்வதேச போர் குற்றயவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல சாட்சியங்களை சேகரித்து வருகின்றனர். அவர்கள் எதற்காக இந்த முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply