யாழ் குடாநாட்டில் அமைதியான முறையில் நத்தார் கொண்டாட்டம்
யாழ் குடாநாட்டில் இம்முறை ஆடம்பரமற்ற, அமைதியான முறையில் நத்தார் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று புதன்கிழமை இரவு இராணுவத்தினரால் ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டிருந்ததால் தேவாலயங்களில் நடைபெற்ற நள்ளிரவு பூசைகளில் கணிசமானளவு மக்கள் கலந்துகொண்டிருந்ததாக எமது யாழ் செய்தியாளர் அறியத்தருகிறார்.
வன்னியில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு அல்லலுறும் நிலையில், மனசாட்சிக்கு ஏற்றவகையில் ஆடம்பரமின்றி நத்தார் பண்டிகையைக் கொண்டாடுமாறு குடாநாட்டு தேவாலயங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இம்முறை நத்தார் கொண்டாட்டங்கள் கடந்த வருடங்களைப் போல சோபிக்கவில்லையெனவும், வன்னி மோதல்கள் மற்றும் விலைவாசி அதிகரிப்பு ஆகியன இதற்கான முக்கிய காரணங்களாக அமைந்திருப்பதாகவும் எமது யாழ் செய்தியாளர் அறியத்தருகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply