தேசிய தைப்பொங்கல் வைபவத்தில் ஜனாதிபதி
தேசிய தைப்பொங்கல் வைபவம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. தைப்பொங்கல் வைபவத்தில் ஜனாதிபதி கலந்துக்கொள்வது தமிழ் மக்களுக்கு சௌபாக்கியம் பிறப்பது என தான் கருதுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் தமிழ மக்களின் முக்கியத்துவமான சமய மற்றும் கலாசார திருநாள் எனவும் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பாகும் தைப்பொங்கல் எதிர்வரும் 17 ஆம் திகதி முடிவடைகிறது.
இறுதி தினமான 17 ஆம் திகதி ஜனாதிபதி தேசிய தைப்பொங்கல் வைபவத்தில் கலந்துக்கொள்வதானது தமிழ் மக்களுக்கு பிறக்கும் சௌபாக்கியமாக தான் கருதுவதாக தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். வைபவத்தில் 50 ஆயிரம் மக்கள் வரை கலந்துக்கொள்வார்கள் என்பதால், அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கைகளில் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் மற்றும் யாழ் நகர முதல்வர் ஆகியோர் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply