அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் : ரில்வின்
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தொடாந்தும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது அவசியமற்றதென அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு முன்னர் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் நடத்துவதனை தடுக்கும் நோக்கில் 1970ம் ஆண்டு அவசரகாலச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவசரகாலச் சட்டத்தின் மூலம் தேர்தல் பிரச்சாரங்களை சுதந்திரமான முறையில் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்து இரண்டாண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில் தொடர்ந்தும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது நியாயமற்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் யுத்தத்தை காரணம் காட்டி அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை நீடித்ததாகவும், நியாயப்படுத்துவதற்கு எவ்வித காரணங்களும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பயங்கரவாத நடவடிக்கைகள் மீளவும் தலைதூக்காமல் இருப்பதனை உறுதி செய்யும் நோக்கில் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply