“தமிழர்களிடையே குரோதங்களை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டாம்”
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் இனக்குரோதங்களை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை வெளியிட வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.ஜனாதிபதி மாளிகையில் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று சந்தித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார். அங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் கூறியதாவது,
பிரபாகரன் எதிர்பார்த்த ஈழத்தை யாருக்கும் கொடுக்க முடியாது. நாட்டில் இன சமத்துவத்தைப் பேண ஊடகங்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும். இனங்களுக்கு இடையில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும்.
அரசாங்கத்தை விமர்சிக்கவும் ஆனால் சர்வதேசத்திற்கு முன்னால் இலங்கை தொடர்பில் பொய்யான பிரசாரங்களைப் பரப்பி நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டாம். என ஜனாதிபதி ஊடகங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply