வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 2 மில்லியன் யூரோக்களை வழங்கத் தீர்மானித்துள்ளது

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு இரண்டு மில்லியன் யூரோக்களை உதவியாக வழங்கத்தீர்மானித்துள்ளது.மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.உணவு மற்றும் சுகாதார அவசர நிவாரண நடவடிக்கைக்காக இந்த நிதி வழங்கப்பட உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
 
கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பெய்து வரும் கடும் மழையினால் பதினொரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளுக்கு உதவிகளை வழங்க வேண்டியது ஐரோப்பிய ஒன்றியத்தின் கடமையாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான நிவாரண ஆணையாளர் கிறிஸ்டாலீனா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply