சங்குப்பிட்டி பாலம் இன்று ஜனாதிபதியால் திறந்து வைப்பு

சங்குப்பிட்டி பாலம் மக்களின் பாவனைக் காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படுகிறது. 288 மீற்றர் நீளமான இந்தப் பாலத்தை நிர்மாணிப்பதற்காக 1037 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் செலவு செய்துள்ளது. இரு வழிப் பாதைகளைக் கொண்ட இந்தப்பாலம் நிர்மாணிக்கப்பட்டதன் மூலம் சுமார் 110 கிலோமீற்றர் தூரம் குறைவதுடன் 3 மணித்தியால பயண நேரம் குறைவடை வதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் இந்தப்பாலம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட பின்னர் இரு பகுதிகளிலிருந்தும் பஸ்களில் பெருந்தொகையான மக்கள் பயணம் செய்ய ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வடபகுதிக்குச் செல்லும் ஜனாதிபதி நாளை யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply