கிறிஸ்தவம் கூறும் போதனைகள் இன்றைய உலகில் முக்கியமானவை:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

நத்தார் பண்டிகையானது இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சமாதானத்தின் இள வரசராக இவ்வுலகில் பிறந்த இயேசு நாதரின் பிறப்பு பற்றிய மகிழ்ச்சிகரமான செய்தியை உலகுக்கு கொண்டுவருகி ன்றது.

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இயேசு நாதரினால் இவ்வுலகுக்கு வழங் கப்பட்ட அன்பு, கருணை மற்றும் மன்னிப்பு என்பன நாடு, தேசம், இனம், சாதி, மொழி போன்ற எல்லா வேறுபாடுக ளையும் கடந்து உலகெங்கிலும் வியாபித் துள்ளது.

எமது இலங்கை வாழ் மக்க ளிடம் மிக நீண்டகாலமாக குடிகொண்டி ருந்த அவநம்பிக்கை என்னும் தடையை உடைத்து பயங்கரவாதத்தை முறியடித்து வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நத்தார் கொண்டுவரும் அன்பும் கருணையும் பொதிந்த செய்தி மிகவும் பொருத்தமானதாகும்.

பெத்தலஹேமில் சிறியதொரு மாட்டுத் தொழுவத்தில் இடம்பெற்ற இயேசு நாதரின் பிறப்பு எல்லா உயிர்களையும் தழுவிச் செல்லும்வகையில் அமைந்த கிறிஸ்தவ சமயத்தின் பரந்துபட்ட அன்பைக் குறித்து நிற்கின்றது.

மனிதனது பேராசையினால் பிரச்சினைகளுக்குள் தள்ளப்பட்டிருக்கும் இன்றைய உலகில் ஏழைமக்களுக்கும் துன்பப்படுகின்றவர்களுக்கும் இப்பூவுலகில் எம்முடன் ஒன்றாக வாழும் எல்லா உயிரினங்களையும் காப்பதற்கும் அன்புக்கரம் நீட்டும் கிறிஸ்தவ சமயத்தின் போதனைகளு க்கேற்ப எளிமையாகக் கொண்டாடப்படும் நத்தார் பண்டிகை மிகவும் அர்த்தம் பொதிந்ததாகும்.

உங்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சிகரமான நத்தார் வாழ்த்துக்கள். இவ்வாறு ஜனாதிபதி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply