கிழக்கில் தேர்தலை நடத்துவதா, இல்லையா?: இன்று முடிவு
கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி தேர்தலை பிற்போடுவதா, இல்லையா என்று இன்று தீர்மானிக்கவிருப்பதாக தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.அதற்கான விசேட கலந்துரையாடல் இன்று தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெறுகிறது. இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதி சிரேஷ்ட மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர் களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வேட்புமனு தாக்கல் செய்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு இடையூறு ஏற்படுமா என்பது பற்றி இன்று விரிவாக ஆராயப்படவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாவிடின் அவசரகால சட்டத்தின் கீழ் அப்பிரதேசத்தில் தேர்தலை பிற்போடு வதற்கு தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் கூறுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply