சீரற்ற கால நிலை காரணமாக மன்னாரில் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரிப்பு

மன்னாரில் மரக்கறி வகைகளின் விலை திடீரென அதிகரித்திருப்பதினால் நுகர்வோரும் வியாபாரிகளிலும் இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர். கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக ஏற்பட்டிருக்கின்ற சீரற்ற கால நிலை காரணமாக பல்வேறுபட்ட அழிவுகள் இடம்பெற்றிருக்கின்றது. இந்நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள விவசாய செய்கை, சிறிய பயிர்ச்செய்கை மற்றும் தோட்டச்செய்கைகளும் அழிவடைந்திருக்கின்றது. இதனால் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து மன்னாருக்கான மரக்கறிகளை எடுத்து வருவதில் வியாபாரிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது மன்னாரில் மரக்கறி வகைகளுக்கான விலைகள் திடீரென  அதிகரித்திருப்பதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

Ø இதன்படி ஒரு கிலோ கரட்   140 ரூபா தொடக்கம் 160 ரூபா வரையிலும்

Ø ஒரு கிலோ லீக்ஸ்         140 ரூபா தொடக்கம் 160 ரூபா வரையிலும்

Ø ஒரு கிலோ தக்களி        100 ரூபா தொடக்கம் 120 ரூபா வரையிலும்

Ø ஒரு கிலோ போஞ்சி        200 ரூபா தொடக்கம் 240 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.

Ø அதே வேளை கோவா கிலோ ஒன்று     80 ரூபா தொடக்கம் 120 ரூபா வரையிலும்

Ø பச்சைமிளகாய் கிலோ ஒன்று      350 ரூபா தொடக்கம் 400 ரூபா வரையிலும்

Ø கறிமிளகாய் கிலோ ஒன்று        200 ரூபா தொடக்கம் 240 ரூபா வரையிலும்

Ø கத்தரிக்காய் கிலோ ஒன்று        140 ரூபா தொடக்கம் 160 ரூபா வரையிலும்

Ø பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 120 தொடக்கம் 140 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க சின்ன வெங்காயம் கிலோ ஒன்று 240 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுவரும் அதே வேளை சந்தையில் பாரிய தட்டுப்பாடும் நிலவி வருகின்றது. இதனிடையே உருழைக்கிழங்கு மட்டுமே கிலோ ஒன்று 55 ரூபா தொடக்கம் 70 ரூபா வரையன சாதாரண விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் மன்னார் மரக்கறி சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் வர்த்தகர் ஒருவர் தெரிவிக்கையில் தம்புள்ள மற்றும் வவுனியா பகுதிகளில் உள்ள சந்தைகளில் இருந்தே மன்னாருக்கான மரக்கறி வகைகளை எடுத்துவரவேண்டியிருப்பதனால் அங்கு ஏற்பட்டிருக்கும் விலை அதிகரிப்பு, மழை காரணமாக மரக்கறி வகைகளுக்கு ஏற்பட்டிருக்கும் சேதங்கள் மற்றும் போக்குவரத்து உள்ளடங்கலாக ஏற்றி இறக்கும் நடவடிக்கைகளுக்கான கூலி அதிகரிப்பே மன்னாரின் மரக்கறி விலைகளின் அதிகரிப்பிற்கு காரணம் என தெரிவிக்கின்றார்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply