தமிழ் மக்களின் எதிர்கால மேம்பாட்டுக்கான சகல வசதிகளையும் அரசு செய்து கொடுக்கும் – ஜனாதிபதி
தமிழ் மக்கள் முப்பது வருட காலம் அனுபவித்த துயரங்கள் போதும். அரசாங்கம் அவர்களின் எதிர்கால மேம்பாட்டுக்கான சகல வசதிகளையும் செய்து கொடுக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற தேசிய பொங்கல் விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி வடக்கு மக்களின் வாழ் வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.தமிழில் தமது உரையைத் தொடர்ந்த ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:
வடக்கின் வசந்தம் மூலம் வட பகுதி யில் பாரிய அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. சிலர் இதனைக் குழப்ப முயற்சிக்கின்றனர். எனினும் எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் சளைக்காது செயற்பட நாம் உறுதிபூண்டுள்ளோம். நாம் சொல்வதைச் செய்வோம் செய்வதையே சொல்வோம். பயங்கரவாதத்தை ஒழிப்போம் எனக் கூறி அதனைச் செய்தோம். நாட்டை ஐக்கியப்படுத்தி சமாதான சூழலை ஏற்படுத்துவோம் என்றோம். அதனையும் செய்தோம். மக்கள் இதனை நன்குணர்வர்.
நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் உருவாக இடமளிக்க முடியாது. குறுகிய அரசியல் நோக்க மின்றி மக்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதில் அனைவரும் இணைந்து செயற்படுவோம். நாட்டின் அபிவிருத்தி மிக முக்கியமானது. அபிவிருத்தியில் இணைந்து செயற்படுவது அவசியம்.
வடக்கு, கிழக்கு மலையகம், தெற்கு என சகலரும் எமது மக்கள். சகல பிள்ளைகளும் எமது பிள்ளைகள். அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவோம். ஒரே கொடியின் கீழ் ஐக்கிய இலங்கையை ஒன்றிணைத்து கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply