சமூக நலன் தொடர்பில் சிந்திக்கும் நாடுகளில் இலங்கை 8வது இடத்தில்
சமூக நலன் தொடர்பாக சிந்திக்கும் மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கல்அப் எனும் அமைப்பு 130 நாடுகளில் இது தொடர்பான கணக்கெடுப்பொன்றை நடத்தியுள்ளது.பிறரின் வாழ்க்கைத்தர உயர்வுக்குத் தமது நேரத்தை செலவு செய்தல் மற்றும் பிறருக்குத் தாமாக முன்வந்து உதவுதல் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் இந்தியா 48 வது இடத்தில் இருக்கும் அதேநேரம் இலங்கையின் அயல் நாடுகளான பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் முறையே 27 மற்றும் 40 வது இடங்களை அடைந்துள்ளன. 60 புள்ளிகளைப் பெற்றிருக்கும் அமெரிக்கா இப்பட்டியலில் முதலாவது இடத்திலும் அதற்கு அடுத்ததாக அயர்லாந்தும், அவுஸ்திரேலியா 59 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
கல்அப் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் தாம் வாழும் சமூகத்தில் சமூக நலனுடன் செயற்பட்டு வருவது கண்டறியப் பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பில் கலந்து கொண்ட 130 நாடுகளில் அபிவிருத்தியடைந்த நாடுகளிலுள்ள இளவயதினர் சமூக நலன் செயற்பாடுகளில் அதிக அக்கறை காட்டுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
நலன்புரி அமைப்புக்களுக்கு நிதியுதவி வழங்குதல், அவ்வமைப்புக்களுடன் நேரத்தை செலவு செய்தல், தெரியாதவர்களுக்கு உதவி செய்தல் போன்ற சமூக நலச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply