ஐ. நா. பிரதி செயலர் வன்னி, கிழக்கு விஜயம்
மூன்று நாள் விஜயமாக கொழும்பு வந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகமும் அவசர நிவாரண உதவிகளின் பிரதி இணைப்பதிகாரியுமாகிய கத்தரின் பிரசுங் நேற்று வியாழன் காலை வவுனியா மற்றும் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.வவுனியா விமான நிலையத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளை சந்தித்து நிலைமைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
அநேநேரத்தில், ஐ. நா. சபையின் அதிகாரிகள் மட்டத்திலான நான்கு பேர்கொண்ட குழுவினர் வவுனியா பெரியதம்பனை கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டனரெனவும் அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறியுள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் சில பகுதிகளுக்கும் வெள்ளப் பாதிப்பு பிரதேசங்களுக்கும் அவர், விஜயம் செய்தார்.
குறிப்பாக வவுனியா மனிக்பாம் பகுதியில் மீளக்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரம் பற்றி கேட்டறிந்து கொண்டதுடன் வவுனியா மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.
மனிக்பாம் முகாமில் தங்கியிருக்கும் மக்கள் எந்தெந்த பகுதிகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர் குறித்தும் வவுனியா அரச அதிபர் கத்தரினுக்கு விளக்கமளித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply