நாடு முழுவதும் வேட்பு மனுக்கள் தாக்கல் மும்முரம்
கொழும்பு மாவட்டத்தில் இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்கும், திருகோணமலை மாவட்டத்தில் ஒரு உள்ளூராட்சி சபைக்குமாக மூன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகம பிரதேச சபைக்கும் கெஸ்பாவ பிரதேச சபைக்கும் ஜனசெத பெரமுன வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகர சபைக்கு எம்.எம். ரிஸ்வான் மொஹமட் தலைமையிலான சுயேச்சைக்குழு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது என தேர்தல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கும் வாக்காளர்கள் விண்ணப்பிக்கும் திகதி மேலும் நீடிக்கப்படாது என்றும், 27 ஆம் திகதி வரையே எவ்விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கட்சிகளாகப் பதிவு செய்வதற்கு விண்ணப்பித்த அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்களில் 84 விண்ணப்பங்களைத் தேர்தல்கள் திணைக்களம் நிராகரித்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு அமைய விண்ணப்பித்த கட்சிகளிலேயே 84 கட்சிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஜனவரி மாதமும் புதிய கட்சிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு தேர்தல் நடைபெறுவதற்கு அண்மித்த காலப்பகுதியில் விண்ணப்பங்கள் சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் சுமணசிறி தெரிவித்தார்.
விண்ணப்பிக்கும் அரசியல் கட்சி கள் அரசியலில் ஆர்வம் காட்டுவ தைப் போல கட்சி தொடர்பான கண க்கறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்க ளைப் பேணுவதிலோ அல்லது அவ ற்றைச் சமர்ப்பிப்பதிலோ ஆர்வம் காட்டுவதில்லையென்றும், இத னால் பல கட்சிகளின் விண்ணப்பங் கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கட்சியொன்றை விண்ணப்பிப்பதற்குத் தேவையான உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படா மையால் கட்சிகளின் விண்ணப்பங் கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் சுமணசிறி மேலும் தெரிவித்தார்.
எனினும், நிராகரிக்கப்பட்ட கட்சிகள் மீண்டும் தம்மைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply