வன்னியில் செல்வாக்குள்ள வேட்பாளர்களை தேடும் கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் கூட்டம் வவுனியா புகையிரத நிலைய வீதி வைரவப் புளியங்குளத்தில் அமைந்துள்ள புளொட் அலுவலகத்தில் நேற்று மாலை 5.00மணியளவில் இடம்பெற்றது.
தமிழரசுக் கட்சியின் செயலாளரும் யாழ் மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – ரெலோவின் தலைவரும், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – ரெலோ – வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட் மத்தியகுழு உறுப்பினர்களான சிவனேசன் பவான், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜீ.ரி.லிங்கநாதன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தின்போது வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான வேட்பாளர் நியமனம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதில் எந்தவொரு கட்சியையும் சார்ந்தவர்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்காமல், மக்கள் மத்தியில் செல்வாக்கு உடையவர்களை வேட்பாளர்களாக நியமிப்பது என்றும், அதன் தேர்வுகளை நாளை முதல் ஆரம்பிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திBoth comments and pings are currently closed.