தமிழ்க் கட்சிகளின் கூட்டணிக்கு பாடுபட்ட சிவாஜிக்கு கதவடைப்பு

தமிழ்க் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தி கூட்டணி அமைக்கும் நடவடிக்கையில் ஆரம்பம் முதல் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டுவந்த எம். கே. சிவாஜிலிங்கம் தற்பொழுது ஓரங்கட்டப்பட்டுள்ள மையால் மனவருத்தம் அடைந்துள்ளார். ஆனால் அவரை தாங்கள் புறக்கணிக்கவில்லை யென்றும், தருணம் வரும்போது புதிதாகக் கூட்டணி அமைத்திருக்கும் தமிழ்க் கட்சிகளில் உள்வாங்கப்படுவார் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்துப் பாரிய பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சிகளை, சிவாஜிலிங்கம், ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் ஆகியோர் பிரதிநிதித்துவப் படுத்தும் நான்கு கட்சிகள் ஆரம்பித்திருந்தன. இவர்களில் ஆனந்தசங்கரி மற்றும் சித் தார்த்தனை இணைத்துக்கொள்ளத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்திருக்கும் நிலையில், சிவாஜிலிங்கம் பிரதிநிதித் துவப்படுத்தும் கட்சியான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பை இணைப்பது பற்றி இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை.

‘எந்தவொரு கட்சியையும் ஒதுக்கிவைக்கும் தீர்மானத்தை நாம் எடுக்கவில்லை. சிவாஜிலிங்கத்தையும் இணைப்பது பற்றிக் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி வருகிறோம். சிவாஜிலிங்கத்தை இணைப்பதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கும் அதே வேளை, சிலர் அவரையும் இணைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர். அனைவரையும் இணைத்துக்கொண்டு செல்வதற்கே நாம் விரும்புகிறோம்’ எனப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் கூட்டணி தொடர்ந்தும் செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புடன் கூட்டணி அமைக்கும் முயற்சி களை ஆரம்பித்திருந்த என்னை அவர்கள் இன்னமும் இணைக்கவில்லை எனத் தெரிவித்த சிவாஜிலிங்கம், கடந்த பொதுத் தேர்தலில் இடதுசாரிக் கட்சியான நவ சமசமாஜக் கட்சியுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கை இன்னமும் அமுலில் இருப்பதால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் நவசமசமாஜக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடத் தாம் தீர்மானித்திருப்பதாகக் கூறினார். தமிழ்க் கட்சிகள் இணைந்து உருவாக் கியிருக்கும் இக்கூட்டணி கடந்த காலங்களைப் போல சுயலாபத்துடன் செயற்படாமல் எதிர்காலத்தில் தொடர்ந்தும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவும் அமைந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply