உள்ளூராட்சி தேர்தலில் மலையகத்தில் புதிய கூட்டணி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவென மலையகத்தில் புதிய கூட்டணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் வீ. இராதாகிருஷ்ணன், பி. திகாம்பரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வீ. புத்திரசிகாமணி, எஸ். அருள்சாமி ஆகியோர் இணைந்து ‘மலையக தமிழ்க் கூட்டமைப்பு’ என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறைத் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.
இதற்கமைய, அம்பகமுவ, கொத்மலை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தொழிலாளர் தேசிய முன்னணியின் மயில் சின்னத் தின் கீழ் போட்டியிடுவதெனவும், ஏனைய உள்ளூராட்சிகளுக்கு மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மலையக மக்கள் முன்னணி, தொழி லாளர் தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ள அதே நேரம், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சாதகமான முடிவுகள் எட்டப்படின் பிரபா கணேசனும் புதிய மலையகக் கூட்டமைப்பில் இணைந்துகொள்வாரென்றும் இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.
இதேவேளை, இந்தக் கூட்டமைப் பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீரங்காவின் பிரஜைகள் முன்னணி யும் இணைந்துகொள்ளுமென முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப் பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடைபெறவுள்ள தேர்தலில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளமை தெரிந்ததே.
இதன்படி மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி, மலையக தேசிய தொழிலாளர் சங்கம் ஆகிய அரசியல் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த மலையக தமிழ் கூட்டமைப்பு என்ற தேர்தல் கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று நேற்று 25ம் திகதி அட்டனில் நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையில் மலையக மக்கள் முன்னணி சார்பாக அதன் தலைவி சாந்தினிதேவி சந்திரசேகரன், அரசியல் துறைத் தலைவரும் பாராளு மன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன், முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ். லோரன்ஸ், தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பாக அதன் செயலாளர் எஸ். பிலிப், பிரதிச் செயலாளர் எம். திலகராஜ், முக்கியஸ்தர்களான, எஸ். ஸ்ரீதரன், கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply