ரஸ்ய குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்

ரஸ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கண்டனம் வெளியிட்டுள்ளார். மொஸ்கோ டொமிடோடோவோ விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் 35 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்திருந்தனர். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும், காயமடைந்தவர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி தமது கண்டன அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ரஸ்ய ஜனாதிபதி டிமெற்றி மெடிடேவிற்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த கண்டன அறிக்கையை அனுப்பி வைத்துள்ளார். பயங்கரவாதத்தின் அழிவுகள் தொடர்பில் தமக்கு நல்ல அனுபவம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ரஸ்யாவிற்கு இலங்கை தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply