பொய் வாக்குறுதிகளை வழங்கும் அரசினை தடுத்து நிறுத்தவேண்டும்
இன்றைய காலகட்டத்தில் அரச தரப்பினர் பிராடோ வாகனம் வாங்கும் நிலையில் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு பொதுமக்கள் குறித்த கரிசனையில்ல என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மாவட்டத்த்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டு வெளிவரும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தேர்தலில் அரசின் நிலை குறித்து மக்கள் புரிந்திருப்பார்கள் ஆகவே பொய் வாக்குறுதிகளை வழங்கும் அரசினை தடுத்து நிறுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொணடுள்ளார். இதேவேளை நாளைய தினத்துடன் முடிவடையவுள்ள வேட்டபு மனுத் தாக்கலை தொடர்ந்து தாம் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply