மன்னார் நகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் வேட்புமணு தாக்கல் செய்ய முடியாத நிலை!

மன்னார் மாவட்டத்தில் சுமார் 40 வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் பல்வேறு அரசியல்க் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்பு மணுக்களை  தாக்கல் செய்திருக்கின்றது. நாடளாவிய ரீதியில் இம்மாதம் 20ஆம் திகதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வரும் நியமனப் பத்திர வேட்பு மனுக்கள் இம்மாதம் 27ஆம் திகதி நண்பகல் வரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள்; திணைக்களம் அறிவித்திருக்கின்ற நிலையில் மன்னாரிலும் வேட்பு மணுக்கல் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

மன்னார் மாவட்டத்தில் 10 கட்சிகளின் கூட்டமைப்பான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 06 கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முண்னனி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  உட்பட்ட அரசியல் கட்சிகளும், பல்வேறு சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்பு மணுக்களை தாக்கல் செய்திருக்கின்றன.

இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் நகர சபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை உட்பட ஐந்து உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தல்கள் இடம்பெறஇருக்கின்றது. இடம்பெறவிருக்கும் இத்தேர்தல்கள் மூலம் 46 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதன்படி மன்னார் நகர சபைக்கு ஏழு அங்கத்தவர்களும், மாந்தை பிரதேச சபைக்கு 12 அங்கத்தவர்களும், மன்னார், முசலி, நானாட்டான், பிரதேச சபைகளுக்கு முறையே தலா 9 அங்கத்தவர்கள் வீதம் இவர்கள் தெரிவாக இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று (27.01.2011) மன்னார் மாவட்ட செயலகம், நகர் பகுதி உள்ளிட்ட பிரதேசம் கடும் பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. இன்று நண்பகலுடன் முடிவடைந்திருக்கும் வேட்பு மணுத்தாக்கலின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அ. செல்வம் அடைக்கலநாதன் தலமையிலும், ஆளும் கட்சி சார்பிலான வேட்பாளர்கள் அமைச்சர் றிஷாட் பதியூதின் தலமையிலும் தமது வேட்பு மணுக்களை தாக்கல் செய்திருக்கின்றனர்.

அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மன்னார் நகர சபைக்கான வேட்பு மணுவினை  உரிய நேரத்தில் தாக்கல் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிரக்கின்றது.இது இவ்வாரிருக்க நேற்றய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுயட்சைக்குழுக்கல் சிலவும் தமது வேட்பு மணுக்களை தாக்கல் செய்திருக்கின்றன.

இந்நிலையில் ஆளும் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மணுக்களை தாக்கல் செய்த கையோடு பட்டாசுகள் கொழுத்தி பெரும் ஆரவாரத்தோடு தமது பிரச்சாரங்களையும, விளம்பர போஸ்டர்கள் தாங்கிய வாகன தொடர் பவணியினையும் ஆரம்பித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளுராட்சி தேர்தல்களுக்கான வேட்பு மணுத்தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மன்னாரில் இன்று (27.01.2011) தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் அ. செல்வம் அடைக்கலநாதன் தலமையிலும், ஆளும் கட்சி சார்பில் அமைச்சர் நிஷாட் பதிய+தின் தலமையிலும், ஜக்கிய தேசியக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் டீ.எம்.சுவாமிநாதன் தலமையிலும் வேட்பு மணுக்கல் தாக்கல் செய்யப்படட பின்னர் அவர்கள் வெளியேறுவதை படங்களில் காணலாம். 

குறிப்பு: இச்செய்தி எழுதப்படும் வரையிலும் மன்னாரில் வேட்பு மணுக்களை தாக்கல் செய்த கட்சிகள், குழக்கல் தொடாபான முழமையான விபரங்கள் கிடைக்கப்படவில்லை.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply