முல்லைத்தீவிலும் வேட்பு மணுக்கள் கையளிக்கப்பட்டிருக்கின்றது
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் தமது வேட்பு மனுக்களை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று தாக்கல் செய்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்; தெரிவிக்கின்றன. எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல்களுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை இன்று கையளித்திருக்கின்றார்கள்.
நாடளாவிய ரீதியில் இம்மாதம் 20ஆம் திகதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வரும் வேட்பு மனுக்கள் இம்மாதம் 27ஆம் திகதி நண்பகலுடன் முடிவடைகின்றது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளிலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமது வேட்பாளர்களை களம் இறக்கியிருப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அங்கிருந்து தெரிவிக்கின்றார்.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று பிரஜைகள் முன்ணனி, ஜக்கிய தேசியக்கட்சி, ஆளும் அரசாங்க கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் தமது வேட்பு மணுக்களை தாக்கல் செய்திருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply