ஜனாதிபதிக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான ஏ.எப்.பீ தகவல் வெளியிட்டுள்ளது. சட்டவிரோத படுகொலைகள் இடம்பெற்றதாகத் தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத படுகொலைகளுக்கு நட்ட ஈடாக 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டஈடு கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வொஷிங்டனின் முன்னணி சட்டத்தரணிகளில் ஒருவரான புருஸ் பின்னினால் வழக்குத் தாக்கல் செய்யபப்பட்டுள்ளது. 1991ம் சட்டத்திற்கு அமைய மூன்று கட்சிகாரர்களுக்காக புருஸ் பின் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
வொஷிங்டன் மாவட்ட நீதிமன்றில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த மூன்று பேரின் உறவினர்களின் சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த தகவல் தொடர்பில் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதரகம் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply