இத்தாலியில் இருந்து இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இத்தாலி அரசாங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இலங்கையிலுள்ள இத்தாலிய தூதரகத்தினால் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இப் பொருட்களை, அனர்த்த முகாமைத்துவ நிலையம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளது. கூடாரங்கள், இறப்பர் விரிப்புகள், நீர்த்தாங்கி, நீர் சுத்திகரிப்பு உபகரணம், மின் பிறப்பாக்கிகள், மிதவைகள் மற்றும் உணவு வகைகள் என 3 இலட்சத்து 40 ஆயிரம் யூரோ பெறுமதியான நிவாரணப் பொருட்களை இத்தாலி இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது .
இத்தாலி வெளிவிவகார அமைச்சர் பிரன்கோ பிராட்டினி, அந்நாட்டின் அபிவிருத்தி ஒத்துளைப்பு அலுவலகத்துக்கு விடுத்த பணிப்புரைக்கு அமையவே மேற்படி பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply