ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அமைப்பாளர் கொலை

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை வேட்பாளரும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி அமைப்பாளருமான இரத்தினசிங்கம் சதீஸ் (30 வயது) இன்று காலை 6.30 மணியளவில் சிறி வல்லிபுரம் ஆழ்வார் கோயிலுக்கு அண்மித்த ஆனைவிழுந்தான் பகுதியில் வைத்து இனம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேகச் செயலாளர் ஸ்டாலின் எமக்கு உறுத்திப்படுத்தியுள்ளார்.

மேலும் இவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டாரா? இல்லாவிடில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா? எனத் தன்னால் உறுதிப்படுத்த முடியாதுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply