வன்னியில் உணவுத்தட்டுப்பாடா? நிராகரித்தார் அமைச்சர் ரம்புக்வெல
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்துகொடுக்கப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மற்றும் அங்கிருந்து வெளியேறியவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் களிமோட்டைம ற்றும் சிறிகண்டல் முகாம்களிலுள்ள மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படுவதில்லையென ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி முன்வைத்த குற்றச்சாட்டையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையானளவு உணவுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள், தற்காலிக கூடாரங்கள் அனுப்பிவைக்கப்படுவதாக பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார்.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கும், வன்னியிலிருந்து வெளியேறி அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள மக்களுக்குத் தேவையானளவு நிவாரணப் பொருள்களையும் அனுப்பிவைத்திருப்பதாகவும், வன்னியில் உணவுப் பொருள்களுக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் ஏற்படவில்லையெனவும் ரம்புக்வெல குறிப்பிட்டார்.
சர்வதேச அமைப்புக்கள் வெளியிடும் தகவல்களில் எந்தவிதமான உண்மையும் இல்லையென அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்கென இந்தியா ஒரு தொகுதி நிவாரணப் பொருள்கள் வழங்கியுள்ளமை குறித்தும் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply