சென்னை பெளத்த பீட தாக்குதல் தமிழினத்திற்கு ஒரு தலைகுனிவு

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள பெளத்த மடாலயம் மீது ஒரு கும்பல் திடீரெனப் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தி, அங்கிருந்த வணக்கத்திற்குரிய பெளத்த துறவி முதல் பொதுமக்கள் சிலரைக் காயப்படுத்தி, அங்கிருந்த உடமைகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தியமையானது அனைத்து தமிழினத்திற்கும் அவமானத்தையும், தலைகுனிவையும் தருவதாக அமைந்துள்ளது.

பெரியார்களின் பெயர்களின் அமைப்புகளை வைத்துக்கொண்டு தமிழகத்தில் உள்ள அப்பாவிச் சிங்களவர்கள் மீது காடைத்தனம் புரிபவர்களுக்கு இலங்கைத் தமிழர் மீது சிங்களவர்கள் காடைத்தனம் புரிகிறார்கள் என்று பேச எவ்விதமான அருகதையும் கிடையாது.

இலங்கையில் சிங்களவர்களால் தமிழருக்கு கொடுமை இழைக்கப்படுகிறது எனும் பொய்யான செய்திக்காக சென்னையிலுள்ள அப்பாவிச் சிங்கள மக்களை மடைத்தனமாக வதைக்க முற்பட்டமை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கொன்று குவிப்பதாகக் கூறியும், இலங்கைத் தமிழரை சிங்களவரிடமிருந்து காப்பாற்றுவதுமாகக் கூறியுமே தமிழகத்தில் பலர் இன்று இத்தகைய அடிதடி ஆர்ப்பாட்ட அரசியல் நடத்தி பிரபல்யமாகி வருகின்றனர். முதலில் இவ்விரு விடயங்களிலும் துளியளவும் உண்மை இல்லை என்பதை இத்தகைய அறிவு குறைந்தவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் வீழ்ந்த அரசியலை தட்டி எழுப்பவும், புதிதாக அரசியலில் நுழைந்து எழுச்சி பெறவும் அவர்கள் கையாளும் இலகுவான வழிமுறையே இவ்விரு விடயங்களை முன்னிலைப்படுத்தி அப்பாவித் தொண்டர்களைக் குண்டர்களாக்கி, இத்தகைய வன்முறைகளில் ஈடுபட வைப்பதாகும்.

இலங்கையில் இதுவரை தமிழர்கள் கஷ்டப்பட்டாலும், இப்போது நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். தயவுசெய்து தமிழனுக்குத் தமிழன் உதவுவதாகக் கூறி மீண்டும் இலங்கைத் தமிழரை உபத்திரத்தில் தள்ளிவிட வேண்டாம். அவர்கள் பட்டது போதும், இனியும் பட அவர்களிடம் எதுவுமில்லை. இப்போதுதான் பட்டதிலிருந்து சிறிது சிறிதாக மீண்டு வருகிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply