‘விக்கிலீக்ஸ்’ இணையத்தை முடக்கும் நுட்பம் அமெரிக்காவிடம் இல்லை
நாடுகளுக்கு இடையிலான இரகசியத் தகவல் பரிமாற்றங்களைப் பகிரங்கப்படுத்தி உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை முடக்கும் தொழில் நுட்பம் அமெரிக்காவிடம் இல்லையென விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசேஞ் தெரிவித்துள்ளார்.
‘விக்கிலீக்ஸை முடக்குவது அமெரிக்க அரசாங்கத்துக்கு சாத்தியமில்லாத ஒன்று. அவ்வாறு பலம்வாய்ந்த வகையிலேயே எமது இணையத்தளத்தை அமைத்துள்ளோம்’ என சி.பி.எஸ். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அசேஞ் குறிப்பிட்டார்.
இணையத்தளத்தில் சில பகுதிகள் பாதிக்கப்பட்டபோதும் அவற்றை நாம் சரிசெய்திருப்பதுடன், இணையத்தளம் தடைப்படாதவாறு உலகளாவிய ரீதியில் அனைத்து இடங் களிலிருந்தும் செயற்பாடுகளை முன்னெ டுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், சுவிஸ் வங்கிகளில் கணக்கு களை வைத்திருப்பவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதே தமது இணையத் தளத்தின் அடுத்த இலக்கு எனக் குறிப்பிட்ட அசேஞ், தமது அடுத்த வெளியீடு பற்றிய மேலதிக தகவல்களைத் தற்பொழுது கூறமுடியாதென்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித் திருந்தார். சுவிஸ் வங்கியில் பணியாற்றிய முன்னாள் பணியாளர் ஒருவர் வங்கி தொடர்பான இரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் இணையத் தளத்திடம் கையளித்திருந்தார். இது சுவிஸ் வங்கியில் வைப்புள்ள தரப்பினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply