இந்திய வெளியுறவு செயலர் கொழும்பு வருகை ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு

இந்திய வெளியுறவுச் செய லாளர் திருமதி நிருபமா ராவ் நேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தார். நேற்றிரவு 7.30 மணியள வில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந் தடைந்த இந்திய வெளியுறவுச் செயலாளரை வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள் வரவேற்றனர்.இன்றைய தினம் காலை இவர் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந் தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள துடன் அதனையடுத்து வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிசையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி யொருவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் கலைஞர் கரு ணாநிதியின் வேண்டு கோளுக்கு அமைய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வின் பிரதிநிதியாக திருமதி நிருபமா ராவ் இலங்கை வந்துள்ள தாக தமிழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் அண்மைக் காலமாக எழுந்துள்ள நிலையில் இரு நாட்டு மீனவர்களின் மீன்பிடிப்பதற்கான எல்லைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றைய சந்திப்புகளின் போது மீனவர்கள் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப் படுமெனவும் தெரியவருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply